‘கோட்டா கோ கம’ புரட்சிப் பாதை
15 view
எம்.எஸ்.எம்.அனஸ் ‘கோட்டா கோ கம’விலிருந்துதான் இப்போதைய சர்ச்சைக்குரிய அரசியல் பேசப்பட வேண்டும். ஏனெனில், நாடுதழுவிய மக்களின் அடிப்படை கோரிக்கைகள் மாற்றத்திற்கான சிந்தனைகள் இங்கிருந்துதான் வெளிப்படுகின்றன. பல தடங்கல்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அந்தப்போராட்டங்கள் தொடர்வதற்கு முக்கிய காரணம் அதற்கு இருக்கின்ற மக்கள் ஆதரவு என்பதை நாம் மறுக்க முடியாது. 10 ஆவது நாளன்று அங்கு விஜயம் செய்த அரசறிவியல்துறை பேராசிரியர் நவரத்ன பண்டார, ‘இலங்கை அரசியல் எதிர்காலத்தையும் அரசியல் சாசன (System Change) மாற்றத்தையும் செய்ய இருப்பவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டிய ஆழமான கோரிக்கைகள் இங்கு முன்வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கைக்கான புதிய அரசியல் கலாசாரத்திற்காக அந்த இளைஞர் கூட்டம் இரவுபகலாக போராடி வருகின்றது. அந்த கூட்டத்தின் மீது யாராவது தாக்குதல்கள் நடத்தலாம். ஆனால், ஒருபோதும் இல்லாமலாகாது, அவர்கள் மீண்டும் வருவார்கள். அந்த போராட்ட வீரர்களின் கோரிக்கைகளை நாடு நன்கு அறிந்திருக்கிறது. மேலும் கோட்டா கோ கம காலிமுகத்திடல் சுற்றாடல் ஒரு தனி அரசாக…
The post ‘கோட்டா கோ கம’ புரட்சிப் பாதை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ‘கோட்டா கோ கம’ புரட்சிப் பாதை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
