நான்காம் நாள் ஆட்ட முடிவில் பங்களாதேஷ் அணி 34 ஓட்டங்கள்

42 view
இலங்கை,மே 26 இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இதன்படி, தமது இரண்டாம் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 34 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. முன்னதாக, தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 506 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணிசார்பில், அஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழக்காமல் 145 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 124 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 80 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 58 ஓட்டங்களையும், ஓசத பெர்னாண்டோ 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல் ஹசன் 96 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், எபடோட் ஹொசைன் 148 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இதேவேளை, தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 365 ஓட்டங்களை பெற்றிருந்தது. பங்களாதேஷ் அணி சார்பில் முஷ்பிகர் ரஹீம்…
The post நான்காம் நாள் ஆட்ட முடிவில் பங்களாதேஷ் அணி 34 ஓட்டங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース