நட்பு நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு அவசரமாகத் தேவை! – உச்சிமாநாட்டில் ஜனாதிபதி கோரிக்கை
15 view
ஜப்பானிடம் இருந்து நிதி பெறுவது தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவுக்கு வரும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையின் முக்கிய அபிவிருத்தி பங்காளிகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்வதாக தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை அரசாங்கம் பொருளாதாரத்தையும் நாட்டையும் ஸ்திரப்படுத்த முயற்சிக்கும் வேளையில் ஜப்பான் அதற்கு ஆதரவளிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார். ஜப்பானின் டோக்கியோவில் இன்று (வியாழக்கிழமை) காணொளி அழைப்பின் ஊடாக நடைபெற்ற ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 27ஆவது சர்வதேச மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு சாத்தியமான உதவிகளை ஆராயுமாறு ஜனாதிபதி மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து நட்பு நாடுகளுக்கும் மேலும் அழைப்பு விடுத்தார். குறித்த மாநாட்டில் மேலும் உரையாற்றிய அவர், “பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவத்துடன் புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமித்துள்ளோம். மேலும் தேசிய ஒருமித்த கருத்தை உருவாக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து விவாதங்களை நடத்தி வருகிறோம். கடந்த…
The post நட்பு நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு அவசரமாகத் தேவை! – உச்சிமாநாட்டில் ஜனாதிபதி கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நட்பு நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு அவசரமாகத் தேவை! – உச்சிமாநாட்டில் ஜனாதிபதி கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
