கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணைய் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

4 view
யாழ், மே 26 கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு தேவையான மண்ணெண்ணையை கடற்றொழிலாளர்கள் மத்தியில் பங்கிடுவதற்கான பொறிமுறை தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கடற்றொழில் திணைக்களம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்கள் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதன்போது, கடற்றொழில் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற பெயர் பட்டியலின் அடிப்படையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மண்ணெணாணையை விநியோகம் செய்வதற்கும், விநியோக நடவடிக்கைகளை கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள் மேற்பார்வை செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொழிலுக்கு செல்ல முடியாத நிலையிலுள்ள கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனையடுத்து, நேற்று சுமார் 33 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணை யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ள நிலையில் இன்றும் நாளையும் தலா 33,000 லீற்றர் மண்ணெண்ணை எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள்…
The post கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணைய் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース