ஆறுமுகன் தொண்டமானின் 2ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
15 view
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்சின் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் 2 ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுகள் மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (26.05.2022) உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. அந்த வகையில் மலையப் பகுதிகளில் உள்ள கோவில்களில் விசேட பூஜை வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, நடைபெற்றிருந்தன. இந்த வழிபாடுகளில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அத்துடன் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு அன்ன தானங்களும் வழங்கப்பட்டுள்ளன. கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இன்றைய நினைவேந்தல் வழிபாடுகளிலும் அன்ன தானம் வழங்கும் நிகழ்வுகளிலும் பங்கேற்றிருந்தனர். இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செயற்பட்ட ஆறுமுகன் தொண்டமான், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி…
The post ஆறுமுகன் தொண்டமானின் 2ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆறுமுகன் தொண்டமானின் 2ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
