காலிமுகத்திடல் மோதலைத் தடுக்குமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலை தேசபந்து நடைமுறைப்படுத்தவில்லை!நீதிமன்றில் குற்றச்சாட்டு
17 view
காலிமுகத்திடல் – கொள்ளுப்பிட்டி போராட்டங்களில் ஏற்படக்கூடிய மோதல்களைத் தடுப்பதற்காக, சம்பவம் நடப்பதற்கு முன்தினம் பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்ட எழுத்துமூலமான அறிவுறுத்தல்களை மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நடைமுறைப்படுத்தவில்லை என சட்டமா அதிபர் தெரிவித்தார். போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு நேற்று புதன்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றில் நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிமன்றில் உரையாற்றிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், மே 09 அன்று போர்க்களங்களில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்தினம் சம்பவத்தை தடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கடிதம் எழுதியிருந்தார். மே 09 அன்று அலரி மாளிகையில் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக மே 08ஆம் திகதி பொலிஸ்மா அதிபருக்கு உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது. எனவே, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் மோதல்கள் ஏற்படக்கூடிய பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும்…
The post காலிமுகத்திடல் மோதலைத் தடுக்குமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலை தேசபந்து நடைமுறைப்படுத்தவில்லை!நீதிமன்றில் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலிமுகத்திடல் மோதலைத் தடுக்குமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலை தேசபந்து நடைமுறைப்படுத்தவில்லை!நீதிமன்றில் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
