ஆஸி, இலங்கை தொடர் நடைபெறுவதில் சிக்கல்?
27 view
இலங்கை,மே 25 நெறிமுறை (Ethical) தொடர்பிலான காரணங்களை சுட்டிக்காட்டி அவுஸ்திரேலிய வீரர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதனை ஆட்சேபித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கே மூவகைப் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில் இலங்கையில் தற்போது நிலவுகின்ற பொருளதார மற்றும் அரசியல் நெருக்கடிகள், அவுஸ்திரேலிய வீரர்கள் இலங்கை வருவதற்கு நெறிமுறை ஆட்சேபனை தெரிவிக்க காரணமாக அமைகின்றது. எனினும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணமானது இந்த சுற்றுப் பயணத்திற்கு பொறுப்பாக இருக்கும் உயர் அதிகாரிகள் மேற்கொள்கின்ற தீர்மானத்திற்கு அமைவாக நடைபெறும் எனக் கூறப்படுகின்றது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை கடந்த வாரம் இலங்கையின் நிலைமைகள் குறித்து தமது அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்திருந்ததோடு, இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான தொடரினை நடாத்துவதற்கான பாதுகாப்பு காணப்படுவதனையும் உறுதி செய்திருந்தது. அதன்படி பொது மக்களுக்கு நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு நிலவும் இரவு வேளைகளில்…
The post ஆஸி, இலங்கை தொடர் நடைபெறுவதில் சிக்கல்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆஸி, இலங்கை தொடர் நடைபெறுவதில் சிக்கல்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
