மே09 வன்முறை;கைது செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களை விடுதலை செய்யுமாறு தொழிங்சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை!

38 view
அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்று வந்த ஆர்ப்பாட்டங்களை இலக்கு வைத்து கடந்த 09ம் திகதி அரச ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களையடுத்து கைது செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களை விடுதலை செய்யுமாறு தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மே 9ம் திகதி இலங்கையில் இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோருக்கு எதிராக அமைதி வழியில் தொடர் போராட்டங்களை மேற்கொண்டவர்கள் மீது அரச ஆதரவாளர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஐபக்சவின் கூலிப்படைகள் ஆகியோருடன் இலங்கை காவல்துறையின் சிரேஷ்ட காவல்துறை பணிப்பாளர் தேசபந்து தென்னக்கோன் உட்பட பல அரச பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மேற்கொண்ட அராஐகமான வன்முறையில் பலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை சுமார் 1056 அப்பாவி பொதுமக்கள் வன்முறையில் தொடர்புடையவர்கள் என்ற பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேற்படி கைதானது இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசு சட்டத்தின் கீழ் முறையற்ற கைது நடவடிக்கை ஆகும்.…
The post மே09 வன்முறை;கைது செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களை விடுதலை செய்யுமாறு தொழிங்சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース