இன அழிப்பு விசாரணை, சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
5 view
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது வெறுமனே போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூருவது மாத்திரமல்ல. முப்பது ஆண்டுகால அகிம்சைப் போராட்டத்திலும் அதற்கு அடுத்த முப்பது வருடகால போரிலும் கொல்லப்பட்ட அத்தனை உயிர்களின் தியாகத்திலும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதற்கான சர்வதேச ஏற்பாடாகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அமைதல் வேண்டும். சுனாமி பேரலையில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருதல் என்பது பொது நிகழ்வு. ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு என்பது ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கானது. தமிழ் இன அழிப்புப் பற்றிய சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை ஒருமித்த குரலாக முன்வைக்க வேண்டிய கூட்டு நினைவேந்தலாகும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய வேண்டாமென இலங்கை ஒற்றையாட்சி அரசின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கைப் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் இன அழிப்பு என்பதையோ. ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றியோ ரணில் விக்கிரமசிங்க வெளிப்படையாகக் கூறியது கிடையாது. அவரால் கூறவும் முடியாது. குறிப்பாகச் சிங்கள அரசியல் தலைவர்கள் எவருமே…
The post இன அழிப்பு விசாரணை, சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன அழிப்பு விசாரணை, சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
