உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன் – ரணில்!
20 view
உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று(திங்கட்கிழமை) ஆற்றிய உரையின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றேன். அந்தப் பதவியை நான் கேட்கவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார். நான் அரசியல் தலைவராக மட்டுமின்றி இலவசக் கல்வியை அனுபவித்து கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டத்துறையில் பட்டம் பெற்று உயர்ந்த தேசியத் தலைவர் என்ற வகையிலே இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. 2022 ஆரம்பத்தில் கடந்த அரசாங்கத்தின் வரவுசெலவு திட்டத்தில் 2.3 ட்ரில்லியன் ரூபாய்கள் வருமானமாக உள்ளன என…
The post உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன் – ரணில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன் – ரணில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
