டிட்வா புயலால் சேதமான நூற்றுக்கணக்கான பாடசாலைகள்
1 view
சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மாகாணத்தில் 159 பாடசாலைகள் சேதமடைந்துள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். தற்போது 115 பாடசாலைகள் பாதுகாப்பு முகாம்களாக இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். குறித்த சேதங்கள் தீவிரமானவை மற்றும் பகுதியளவு என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் இடம்பெயர்வு முகாம்களாக இயங்கும் பாடசாலைகளை தவிர, ஏனைய பாடசாலைகளை எதிர்வரும் 16 திகதி திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
The post டிட்வா புயலால் சேதமான நூற்றுக்கணக்கான பாடசாலைகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டிட்வா புயலால் சேதமான நூற்றுக்கணக்கான பாடசாலைகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
