கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று!
9 view
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காந்திபூங்காவில் உள்ள நினைவுத்தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் திருவுருப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது இதன்போது சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், பொது நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
The post கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
