மதுகமவில் ஒரு தொகை தோட்டாக்கள் மீட்பு!
8 view
மதுகம, சிரிகதுர, நாகஹவல பகுதியில் உள்ள கால்வாய் அருகே ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு 50 MPMG தோட்டாக்கள், T – 56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 6 தோட்டாக்கள், 2 ஷோட்கன் தோட்டாக்கள், 9 மில்லிமீற்றர் வகைக்குரிய 12 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட தோட்டக்களை அந்த இடத்தில் விட்டுச் சென்றவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
The post மதுகமவில் ஒரு தொகை தோட்டாக்கள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மதுகமவில் ஒரு தொகை தோட்டாக்கள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
