சீட் பெல்ட் கட்டாயம்; வர்த்தமானி வெளியீடு!
10 view
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் (ஆசனப் பட்டி) அணிவதை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானி அறிவிப்பின்படி, ஒரு அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் மோட்டார் வாகனத்தின் சாரதி மற்றும் எந்த இருக்கையிலும் அமர்ந்து வாகனத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியும் தனிநபரும், சீட் பெல்ட் அணிய வேண்டும்.
The post சீட் பெல்ட் கட்டாயம்; வர்த்தமானி வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீட் பெல்ட் கட்டாயம்; வர்த்தமானி வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
