கொடிகாமத்தில் மரக்குற்றிகளை கடத்த முற்பட்டவர் கைது
14 view
கொடிகாமம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் ஒரு சிறிய ரக லொறியில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதடி பகுதியில் வீதி சோதனை நடத்திய பொலிஸார் அந்த லொறியை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, மரக்குற்றிகளை கொண்டு செல்ல அனுமதி பத்திரம் இல்லாமையை கண்டறிந்தனர். பரிசோதனையில், பல இலட்சம் மதிப்புள்ள மரக்குற்றிகள் சட்டவிரோதமாக கடத்த முயற்சிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. சாவகச்சேரி பொலிஸார் சம்பவ தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கொடிகாமத்தில் மரக்குற்றிகளை கடத்த முற்பட்டவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொடிகாமத்தில் மரக்குற்றிகளை கடத்த முற்பட்டவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
