குண்டசாலை பேருந்து நிலையத்தில் சடலம் மீட்பு.! பொலிஸார் தீவிர விசாரணை
1 view
பல்லேகலை – குண்டசாலை புதிய நகர பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்து நிலையத்தில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை தொடர்ந்து, பொலிஸார் சடலத்தை மீட்டெடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவருக்கு 70 வயது என கூறப்படுவதுடன், உயிரிழந்தவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. தற்போது உயிரிழந்தவரின் சடலம் கண்டி தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பல்லேகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
The post குண்டசாலை பேருந்து நிலையத்தில் சடலம் மீட்பு.! பொலிஸார் தீவிர விசாரணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குண்டசாலை பேருந்து நிலையத்தில் சடலம் மீட்பு.! பொலிஸார் தீவிர விசாரணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.