யாழில் தனியார் காணியில் வெடி பொருட்கள்; மீட்கும் பணி தீவிரம்!
1 view
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் வெடி பொருட்கள் அவதானிக்கப்பட்டது. இதுகுறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் இதனைப் பொலிசார் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அந்தவகையில் இன்றையதினம் குறித்த வெடிபொருட்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெறும் இந்த மீட்பு பணியில் யாழ்ப்பாண பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், தடயவியல் பொலிசார் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
The post யாழில் தனியார் காணியில் வெடி பொருட்கள்; மீட்கும் பணி தீவிரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் தனியார் காணியில் வெடி பொருட்கள்; மீட்கும் பணி தீவிரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.