பகிடிவதையால் உயிரிழந்த மாணவனின் விசாரணை அறிக்கை பல்கலை உபவேந்தரிடம் கையளிப்பு
3 view
பகிடிவதை காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவின் அறிக்கை பல்கலைக்கழக உபவேந்தரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை அடுத்த வாரம் நிர்வாகக்குழுவிடம் கையளிக்கப்படும் என பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுனில் ஷாந்த தெரிவித்தார். தொழில்நுட்ப பீட மாணவனின் மரணம் குறித்த காரணம் நிர்வாகக்குழுவின் மூலம் வௌிப்படுத்தப்படும். சம்பவம் தொடர்பாக 70 மாணவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அதன்படி அவர்களிடமிருந்து 150 மணித்தியாலங்களுக்கும் மேலாக சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
The post பகிடிவதையால் உயிரிழந்த மாணவனின் விசாரணை அறிக்கை பல்கலை உபவேந்தரிடம் கையளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பகிடிவதையால் உயிரிழந்த மாணவனின் விசாரணை அறிக்கை பல்கலை உபவேந்தரிடம் கையளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.