தென்கொரியாவில் காட்டுத் தீ; இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
8 view
தென்கொரியாவின் தென்கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. அந்தப் பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தூதரகம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தீயை அணைக்க தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென் கொரியாவில் சுமார் 35,000 இலங்கைத் தொழிலாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post தென்கொரியாவில் காட்டுத் தீ; இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தென்கொரியாவில் காட்டுத் தீ; இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.