பஸ்களிலுள்ள அபாயகரமான உதிரிப்பாகங்கள் அகற்ற விசேட சோதனை நடவடிக்கை
1 view
பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களை மோட்டார் வாகன பரிசோதகர்களின் ஊடாக சோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் எதிர்வரும் சனிக்கிழமை முதல் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்தார். இதன்போது பஸ்களில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அபாயகரமான பொருத்துக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படுமென அவர் தெரிவித்தார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
The post பஸ்களிலுள்ள அபாயகரமான உதிரிப்பாகங்கள் அகற்ற விசேட சோதனை நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பஸ்களிலுள்ள அபாயகரமான உதிரிப்பாகங்கள் அகற்ற விசேட சோதனை நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.