எதிர் கட்சிக்கும் – சீன அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு
5 view
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணி, இலங்கை வந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் துணை அமைச்சர் சன் ஹையான் குழுவினரை சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த தனித்துவமான கலந்துரையாடல் ஒரு மணித்தியாலத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டதுடன், இக்கலந்துரையாடலுக்கு மேலதிகமாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பிரதியமைச்சருக்கும் இடையில் 45 நிமிட நேருக்குநேர் கலந்துரையாடலும் இடம்பெற்றது. பொருளாதாரம், வர்த்தகம், மற்றும் அரசியல் உறவுகள் என பல விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கமைவாக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தக உறவுகளை கட்டியெழுப்புவது தொடர்பில் இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் துறை தலைவர்கள் கூறியுள்ள நிலையில், சீனாவின் பொருளாதார வளர்ச்சி மாதிரியை மாற்றி, தற்போதைய சூழ்நிலையில்…
The post எதிர் கட்சிக்கும் – சீன அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எதிர் கட்சிக்கும் – சீன அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
