சர்வதேச விசாரணையின் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வேண்டும்- உறவுகள்!
44 view
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச விசாரணை ஊடாகவே தீர்வு வழங்கப்படும் என்று மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார். மன்னாரில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்பாக சர்வதேச விசாரணையே எமக்கு வேண்டும் என கோரி நாங்கள் கடந்த 13 வருடங்களுக்கு மேலாக சர்வதேசத்திடம் கோரி வருகிறோம். இலங்கை அரசில் எவ்வித நம்பிக்கையும் எமக்கு இல்லாத நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச விசாரணையே தேவை என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைத்தோம். ஆனால் 13 வருடங்களாகியும் எமது கோரிக்கை நிறைவேறவில்லை. எமது கோரிக்கை நிறைவேறும் நிலையில் இலங்கையில் இருந்து ஜெனிவா செல்கின்ற அமைச்சர்களும் அரசு சார்பாக செல்கின்றவர்களும் சர்வதேச விசாரணை தேவையில்லை என்றும் உள்நாட்டு விசாரணை வேண்டும் என்றும் கூறுகின்றனர். 51 ஆவது ஜெனிவா…
The post சர்வதேச விசாரணையின் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வேண்டும்- உறவுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேச விசாரணையின் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வேண்டும்- உறவுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
