இருளில் மூழ்கிய அண்டார்டிகா: Long Night ஆரம்பம்
4 view
அண்டார்டிகா,மே 17 அண்டார்டிகாவில் சூரிய உதயம் இல்லாமல் நீண்ட இரவு ஆரம்பமானது. இதனை ஆராய்ச்சியாளர் உறுதிப்படுத்தினர். கடந்த மே 13 அன்று இறுதி சூரிய அஸ்தமனத்துடன், ‘ Long Night ‘ எனப்படும் நீண்ட இரவு காலகட்டத்திற்குள் அண்டார்டிகா நுழைந்து விட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். உலகின் பிற இடங்களில் 4 பருவக் காலங்கள் நிகழ்வதே இயற்கையின் அதிசயம். ஆனால், அண்டார்டிகாவில் மட்டும் கோடைக்காலமும், குளிர்காலமும் மட்டுமே இருக்கும். பூமியின் மிகவும் குளிரான பகுதியான இங்கு, வருடத்தின் 6 மாதங்கள் சூரிய ஒளியிலும், எஞ்சியுள்ள 6 மாதங்கள் இருளிலும் மூழ்கும். இந்த நீண்ட இரவு காலத்தை, விண்வெளி வீரர்கள் நீண்ட விண்வெளிப் பயணங்களுக்குச் செல்வதற்கு முன், கடுமையான விண்வெளி சூழலை சமாளிப்பதற்காகப் பயிற்சி எடுக்க பயன்படுத்திக் கொள்கின்றனர். அண்டார்டிகாவில் உள்ள கான்கார்டியா என்ற பகுதியில், பூமியின் தொலைதூரத் தளத்தை இயக்கும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) 12 உறுப்பினர்களைக் கொண்ட குழு அங்கு…
The post இருளில் மூழ்கிய அண்டார்டிகா: Long Night ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இருளில் மூழ்கிய அண்டார்டிகா: Long Night ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
