ட்ரம்ப் காலத்தில் கியூபா மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்கியது பைடன் நிர்வாகம்!
29 view
கியூபா மீது முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கான திட்டங்களை அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய நடவடிக்கைகளின் கீழ், குடும்பத்துக்கான பணம் அனுப்புதல் மற்றும் கியூபாவிற்கு பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இதுதவிர, மேலும், கியூபா நாட்டவர்களுக்கான அமெரிக்க விசாக்கள் பரிசீலனையும் துரிதப்படுத்தப்படும். இந்த நடவடிக்கை, கியூபா குடிமக்கள் அரசாங்க அடக்குமுறையில் இருந்து விடுபட்ட வாழ்க்கையைத் தொடர அனுமதிக்கும் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறினார். பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்படுவதால், குடும்பப் பணம் அனுப்பும் வரம்பு, அமெரிக்காவில் குடியேறியவர்கள் கியூபாவில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பும் நிதி அகற்றப்படும். முன்னர் புலம்பெயர்ந்தோர் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் 1,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அனுப்புவது தடுக்கப்பட்டது. புதிய திட்டங்களின் கீழ் குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கான நன்கொடைகளும் அனுமதிக்கப்படும். ஆனால், அமெரிக்க அதிகாரிகள், சிவிலியன் எலக்ட்ரானிக் பேமெண்ட் செயலிகளை…
The post ட்ரம்ப் காலத்தில் கியூபா மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்கியது பைடன் நிர்வாகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ட்ரம்ப் காலத்தில் கியூபா மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்கியது பைடன் நிர்வாகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
