ஆரியகுளம் வெசாக் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நிலைப்பாடு
17 view
யாழ்ப்பாணம்,மே 16 நாகவிகாரை பிக்குவின் கோரிக்கைக்கமையவும் விகாரைக்கு வந்துபோகிறவர்களின் பொழுது போக்கு வசதிக்காகவுமே ஆரியகுளம் புனரமைக்கப்பட்டது. அதனால் அதன் தேவைகளை நிறைவேற்றவே வட மாகாண ஆளுநர் கேட்கிறார். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடந்த ஊடக சந்திப்பின் போது, ஆரியகுளத்தில் வெசாக் கூடுகளை கட்ட அனுமதிக்காவிட்டால் யாழ் மாநகர சபையை கலைக்க நேரிடும் என வடமாகாண ஆளுநர் எச்சரிக்கை விடுத்ததாக வெளியான செய்தி தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடமாகாண ஆளுநரின் கருத்தை நாம் கண்டிக்கின்றோம். அது மிகப் பிழையான கருத்து. யதார்த்தம் என்னவென்றால் இனவெறி கொண்ட ஜனாதிபதி தயவில் இருக்கின்ற ஒருவரின் கருத்துக்கு முண்டு கொடுக்கும் வகையில் தமிழ்தேசியம் பேசிக்கொண்டு சிங்கள தேசியவாதத்திற்கு முண்டு கொடுத்து அவர்கள்…
The post ஆரியகுளம் வெசாக் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நிலைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆரியகுளம் வெசாக் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நிலைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
