வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகள் பட்டியல் வெளியீடு: ஐ.நா அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
28 view
நியூயார்க்,மே 16 உலக அளவில் வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை நேற்று வெளியிட்டது. வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளில் பாகிஸ்தானையும் ஐ.நா அறிக்கையில் பட்டியலிட்டுள்ளது. ஐ.நா-வின் பாலைவனமாதல், வறட்சி தினம் ஜூன் 17ல் கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒப்பந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் உட்பட 23 நாடுகளில் வறட்சியால் அவசரநிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் – நாட்டின் 80 சதவிகிதம் வறண்ட அல்லது அரை வறண்ட நிலமாக உள்ளது. மோசமான நில மேலாண்மை நடைமுறைகள் மற்றும் இயற்கை வளங்களுக்கான அதிகரித்த தேவைக்காக நிலத்தை பாழ்படுத்துவது போன்ற காரணங்களால் பாலைவனமாக்கல் ஏற்படுகிறது. வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகள் பின்வருமாறு:- ஆப்கானிஸ்தான், அங்கோலா, பிரேசில், புர்கினா பாசோ, சிலி, எத்தியோப்பியா, ஈரான், ஈராக், கஜகஸ்தான், கென்யா, லெசோதோ, மாலி, மொரிட்டானியா,…
The post வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகள் பட்டியல் வெளியீடு: ஐ.நா அறிக்கையில் அதிர்ச்சி தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகள் பட்டியல் வெளியீடு: ஐ.நா அறிக்கையில் அதிர்ச்சி தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
