முட்டை விலை அதிகரிப்பு – கேக் உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்..!
7 view
முட்டை விலை அதிகரிப்பால் பண்டிகைக் காலங்களில் கேக் உற்பத்தியை மேற்கொள்ளவில்லை என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, அந்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், சுமார் 25 சதவீதமான கேக் உற்பத்தி மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது சந்தையில் முட்டை ஒன்று 55 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை, சந்தையில் மரக்கறிகளின் விலை மேலும் குறைந்துள்ளது. மலைநாட்டு பகுதிகளில் பயிரிடப்படும் மரக்கறிகளே இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
The post முட்டை விலை அதிகரிப்பு – கேக் உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முட்டை விலை அதிகரிப்பு – கேக் உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
