வவுனியா – நெடுங்கேணியில் வடக்கு மாகாண புத்தாண்டு விழா முன்னெடுப்பு!
8 view
வவுனியா நெடுங்கேணியில் வடக்கு மாகாண புத்தாண்டு விழா இன்று இடம்பெற்றது. வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை, வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம், தொழில்துறை திணைக்களம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலகமும் வவுனியா வடக்கு வலயக் கல்வி அலுவலகம் இணைந்து நடாத்திய குறித்த நிகழ்வானது நெடுங்கேணி மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார். இதன்போது பாரம்பரிய முறையில் விருந்தினர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றதோடு தமிழ் சிங்கள கலை நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுக்கள், பாரம்பரிய உணவு கண்காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இந் நிகழ்வில் வவுனியா மாவட்டச் செயலாளர் சரத்சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஷ்குமார், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன் மற்றும் முக்கியஸ்தர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
The post வவுனியா – நெடுங்கேணியில் வடக்கு மாகாண புத்தாண்டு விழா முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா – நெடுங்கேணியில் வடக்கு மாகாண புத்தாண்டு விழா முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
