இலங்கையில் பயிரிடப்படவுள்ள உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழம்..!
7 view
உலகின் மிகவும் பிரபலமான அன்னாசி வகைகளில் ஒன்றான MD 2 அல்லது Super Sweet Pineapple இலங்கையில் பயிரிடுவதற்கான அவசர பரிந்துரைகளை விவசாயத் திணைக்களம் வழங்க உள்ளது. உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழம் இலங்கையில் இருந்து பதிவாகியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார், எனவே, இலங்கையில் பயிரிடப்படும் அன்னாசிப்பழங்களுக்கு உலக சந்தையில் அதிக தேவை உள்ளது. இந்நிலையில், MD 2 அன்னாசி வகைக்கு உலக சந்தையில் அதிக கிராக்கி நிலவுகின்ற போதிலும், இந்த அன்னாசி வகையை இந்த நாட்டில் பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அத்தோடு, இனிப்புச் சுவை மற்றும் குறைந்த அமிலத்தன்மை கொண்ட இந்த அன்னாசி வகையை இலங்கையில் பயிரிட நடத்தப்பட்ட ஆராய்ச்சியும் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, பயிர் வெளியீட்டுக் குழுவின் பரிந்துரைகளின் கீழ், இலங்கையில் சாகுபடிக்கு இந்த MD 2 அன்னாசி வகையை பரிந்துரைக்கும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு அமைச்சர் விவசாயத் திணைக்களத்திற்கு ஆலோசனை…
The post இலங்கையில் பயிரிடப்படவுள்ள உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் பயிரிடப்படவுள்ள உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
