'ஜனாதிபதி அன்பளிப்பு' எனும் பெயரில் போலி செய்தி – மக்களுக்கு எச்சரிக்கை
4 view
‘ஜனாதிபதி அன்பளிப்பு’ என்ற அரசாங்க உதவித் திட்டம் குறித்த போலி செய்தி ஒன்று, தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும், அரசாங்கத்தின் எந்தவொரு முடிவும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஊடக சந்திப்புகள் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும். எனவே, இதுபோன்ற செய்திகள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதேநேரம், சமூக ஊடக பயனர்களும் இதுபோன்ற தவறான தகவல்களை, அடுத்தவர்களுக்கு பகிர்வதை நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
The post 'ஜனாதிபதி அன்பளிப்பு' எனும் பெயரில் போலி செய்தி – மக்களுக்கு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'ஜனாதிபதி அன்பளிப்பு' எனும் பெயரில் போலி செய்தி – மக்களுக்கு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.